தனியார் கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 29 March 2022

தனியார் கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு

உத்தனப்பள்ளி அருகே கல்குவாரியால் விவசாய நிலம் பாதிப்பு அடைவதாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி , துப்புகானப்பள்ளி , சொன்னேயூர் , கன்ஜூர் , பேட்டகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயம் தொழில் செய்து வருகின்றனர்.

புதினா , தக்காளி, கொத்தமல்லி , சாமந்தி பூ , ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
தற்போது துப்புகானப்பள்ளி என்னுமிடத்தில் 4 கல்குவுரிகள் செயல்ப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கல்குவாரியால் ஜல்லிகற்க்கள் , தூசுக்கள் படர்ந்து விவசாய நிலம் பாதிப்பதாக விவசாயிகள் வருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கல்குவாரி டெண்டர் முறைப்படி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள குவாரியால் விவசாயம் செய்யமுடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்


இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றிய தலைவர் சம்பங்கி ராமைய்யா தலைமையில் கல்குவாரி டெண்டர் ரத்து செய்திடவும் , விவசாயத்தை காத்திடவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad