பணி நிரந்தரம் கோரி ஊழியர்கள் தற்கொலை முயற்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 10 March 2022

பணி நிரந்தரம் கோரி ஊழியர்கள் தற்கொலை முயற்சி

சூளகிரி அருகே தனியார் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் கோரி ஊழியர்கள் டவர் மீது  ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டகுறுக்கி என்ற கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில்  100 கற்கும் மேற்ப்பட்ட  ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


தொழில்சாலையில் பணிபுரியும் 15 கற்கும் மேற்ப்பட்ட ஊழியர்களை தீடிரென பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . மீண்டும் ஊழியர்களை பணிக்கு சேர்த்திட  தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தனியார் தொழில்சாலையில் பணி நிக்கம் செய்யப்பட்ட நபர்கள் இன்று காலை அப்பகுதியில் அமைந்துள்ள டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் போலிசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் டவரில் இருந்து ஊழியர்கள் இறங்கி சென்றனர

No comments:

Post a Comment

Post Top Ad