ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 19 March 2022

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்:தக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஎஸ்பி யிடம் புகார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கலுகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓசூர் டிஎஸ்பி அலுவலகத்திற்க்கு வந்து தன்னை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு ஒன்று அளித்தார்.


ஓசூர் அடுத்த கலுகொண்டபள்ளி கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார், மேலும் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டே மற்ற நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகிறார்,கடந்த சில தினங்களுக்கு முன்பு சூரியநாராயணன் என்பவர் நாகராஜன் அணுகி அவரது நிலத்தை விற்று தருமாறு அவரிடம் சொன்னதாகவும் மேலும் இந்நாள்வரை அந்த நிலம் நீதிமன்ற வழக்கில் இருந்து தற்போது எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது என கூறி அதற்குரிய ஆவணங்களை காண்பித்துள்ளார் அந்த ஆவணங்களை தனக்கு தெரிந்த வழக்கறிஞரிடம் கொடுத்து சரி பார்த்து அதன் பிறகு அதில் எந்த ஒரு வில்லங்கமும் இல்லை என பார்த்து பார்த்து சரி பார்த்த பின்பு அந்த நிலத்தை வேறு நபருக்கு விட்டுக் கொடுத்துள்ளார் நாகராஜ்,


இந்நிலையில் பெலகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தம் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நாகராஜனை வழிமறித்து தகாத வார்த்தையில் திட்டியும் இது என்னுடைய நிலம் நீ யார் அதை விற்று கொடுப்பதற்க்கு  என கூறி, அதன் பிறகு கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளதாக  இன்று ரியல் எஸ்டேட் நாகராஜ் ஓசூர் டிஎஸ்பி.சிவலிங்கத்திடம் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் மேலும் நாகராஜ் ஆகிய என்னை மிரட்டிவரும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி  புகார் மனு அளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad