ஓசூரில் 10வது, 38வது வார்டில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்துக்கொண்டனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 10 April 2022

ஓசூரில் 10வது, 38வது வார்டில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 38 வது வார்டில் மாற்று கட்சியிலிருந்த சூரி, ரவி மற்றும் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர், இதேபோல் 10 வார்டு பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத்தை சேர்ந்த சிவா மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஓசூர் மேயர் S.A.சத்யா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இணைந்தவர்களுக்கு ஒய்.பிரகாஷ் கதர் துண்டு அணிவித்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார், தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், வீடு தேடி மருத்துவ சேவை அதேபோல் கல்வி சேவை போன்ற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்,இப்போது இப்பகுதியில் வீட்டுமனை பட்டா வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளீர்கள் இதனை உடனடியாக பரிசீலனை செய்து அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தெரிவித்தார்.


தற்போது தமிழக முதல்வர் சீரிய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்லாட்சியில் மேலும் வலு சேர்க்கும் விதமாக தங்களை இணைத்துக் கொண்டதாக மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர், இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடசாமி, சம்பத் ரமேஷ், கஜேந்திர மூர்த்தி, தியாகராஜ், கோபால் மற்றும் கழக பிரமுகர் மூர்த்தி ரெட்டி, K.T.R.தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad