முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த இரண்டு நபர்களை கைது செய்த கெலமங்கலம் காவல்துறையினர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் ஒண்ணுப்பள்ளியில் மகேஸ்வரி என்பவருக்கும், அவரது கணவரான எதிரிக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில் 07.04.2022 ஆம் தேதி மதியம் சுமார் 01.30 மணிக்கு மகேஸ்வரி அவரது உறவினர்களுடன் ஹரிஷ் என்பவரின் ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்த போது மகேஸ்வரியின் கணவரும் மற்றொரு எதிரியும் மகேஸ்வரியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கத்தியால் இடுப்பு பகுதி மற்றும் தலைப்பகுதியில் வெட்டி கொலை முயற்சி செய்ய முயன்றதாக மகேஸ்வரி என்பவர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் விசாரணை செய்து இரண்டு எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment