பர்கூர் அருகே போலத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழா- 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 11 April 2022

பர்கூர் அருகே போலத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழா- 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பர்கூர் அருகே போலத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழா- 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலூக்க பட்லபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலகுட்டை பகுதியில் அமைந்துள்ள போலத்தம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. 

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழா இன்று நடைபெற்றது.

இன்று அதிகாலை காலை மூலவர் போலத்தம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கோவிலுக்கு முன்பு அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad