மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை போலீசார் மீட்டனர் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 11 April 2022

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை போலீசார் மீட்டனர்

போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் மூன்று நாட்களாக சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை போச்சம்பள்ளி போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்புகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக இளம்பெண் ஒருவர் சுற்றி திரிவதாக பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்துள்ளவர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவலளித்துள்ளனர், தகவலின் பேரில் அங்கு வந்த அடுத்த போலீசார் அவரை மீட்டு ஆட்டோவில் போச்சம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த இளம்பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது, பின்னர் அவரிடம் மேலும் விசாரணையில் அவர் மத்தூர் அடுத்த தோழனூர் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என்பவரது மகள் பவித்ரா22 என்பதும் அவரை திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை திருமணம் செய்துள்ளதாகவும் தெரியவந்தது. பின்னர் பவித்ராவின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பெண்ணை அவரிடம் ஒப்படைத்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad