ஓசூரில் எம்ஜிஆர் கல்லூரியில் வைப் (Vibe) - 4 தேசிய கருத்தரங்கம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 April 2022

ஓசூரில் எம்ஜிஆர் கல்லூரியில் வைப் (Vibe) - 4 தேசிய கருத்தரங்கம்

ஓசூரில் எம்ஜிஆர் கல்லூரியில் வைப் (Vibe) - 4 தேசிய கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறையின் சார்பாக "வைப்" (Vibe) - 4" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு தொடங்கியது.

தொடக்க விழாவில் எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முனைவர் அ.முத்துமணி அவர்கள் குத்து விளக்கேற்றினார் அவர் வெற்றிபெறும்வரை குதிரையைப் போல் ஓடவேண்டும் வெற்றிப்பெற்றபிறகு குதிரையைவிட வேகமாக ஓடவேண்டும். அப்பொழுதுதான் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு உண்டு. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு துவண்டுவிடாமல் நிதானமாகப் போராடவேண்டும் என்று மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டினார்.

சிறப்பு விருந்தினராக முனைவர் P.சதீஷ் அவர்கள் கலந்துகொண்டார். அவர் இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது. அனைத்துத் துறைகளிலும் இணையத்தின் பயன்பாடு பெருகிவிட்டது. அதனடிப்படையில் இணைய உலகினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமாறு மாணவர்களிடம் வலியுறுத்தினார். மேலும் கருத்தரங்கில் புதுவகையான ரோபோட்களைச் செய்து காட்டிய மாணவர்களுக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவிற்கு கணினி பயன்பாட்டுத் துறைத்தலைவர் முனைவர் கு.சிவராமன் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று வரவேற்புரை நல்கினார். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, பெங்களூரைச் சேர்ந்த கல்லூரிகளிலிருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர்களும்

இவ்விழாவினைக் கணினி பயன்பாட்டுத்துறை மாணவர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad