நிலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிறப்பு முகாம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 13 April 2022

நிலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிறப்பு முகாம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் வீரமலை ஊராட்சிக்குட்பட்ட பெரியகரடியூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா மாற்றும்  நிலம் சம்பந்தமாக பிரச்சினைகளுக்கு கிராம அளவில் தீர்வு காணும் சிறப்பு முகாம் வீரமலை ஊராட்சி மன்ற தலைவர் முனிரத்தினம் குணசேகரன் தலைமையில்  21. மனுக்கள் பெறப்பட்டது.


இதற்கு முன்னதாக வட்டாட்சியர் இளங்கோ இம்முகாமில் சிறப்பு அம்சங்கள் பற்றியும் பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார் மண்டல துணை வட்டாட்சியர் சிவசங்கரன் வருவாய் ஆய்வாளர் லதா . கிராம நிர்வாக அலுவலர்கள் ராகேஷ் சர்மா ,ராஜாராம், ராஜா வேடியம்மாள், நாகரசம்பட்டி உள்வட்ட நில அளவையர் அம்சா மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad