55 ஆயிரம் பனைமரங்கள் நடப்படுவதாக வனத்துறை தகவல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 19 April 2022

55 ஆயிரம் பனைமரங்கள் நடப்படுவதாக வனத்துறை தகவல்

அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்கும் தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரியில் சமூக காட்டுகள் வளர்ப்பு திட்டத்தில் கீழ் ₹ 50 லட்சம் மதிப்பில்
சுமார் 55 ஆயிரம் பனை மரம் நாற்றங்கால் உற்பத்தி, விரைவில் நடவு செய்ய இருப்பதாக மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உறுதி.
.......................................................
மனிதகுலத்திற்கு அற்புதமான மருத்துவ குணம் கொண்ட மரமாக பனைமரம் உள்ளது, இந்த பனைமரங்களில் இருந்து
பதநீர், பனை வெல்லம், பனை பழம், பனங்கிழங்கு, பனை நுங்கு, பனை கற்கண்டு
என உணவுப்பெருள்கள்
இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது,
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அதிக அளவில் பனை மரங்கள் உள்ளது.
இந்த பனைமரங்களை நம்பி ஆயிரக்கணகான பனைமரத்
தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

 இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பனை மரங்கள் காலப்போக்கில் செங்கல் சூலைகளுக்கு விறகுகாக வெட்டப்பட்டு அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்கவும் புதியதாக பனை மரங்களை உற்பத்தி செய்து வளர்க்கும் நோக்கிலும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 
சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பனை நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி துவங்கி வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது,

கடந்த ஆண்டு 80 ஆயிரம் பனை விதைகள் வாங்கப்பட்டு போலுப்பள்ளி, கூசுமலை, பையப்பள்ளி, மாதேப்பட்டி, கெலமங்கலம், ஓசூர் ஆகிய ஆறு இடங்களில் உள்ள வனத்துறை நர்சரிகளில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது,
இப்பணியில் மட்டும்
50-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கடந்த 10 மாதங்களாக 80 ஆயிரம் பனை விதைகள் பயிரிட்டதில் 55 ஆயிரம் பனை நாற்றங்கால் உற்பத்தி செய்து சாதனைப் படைத்துள்ளனர்.
இதுகுறித்து சமுக காடுகள் வளர்ப்பு மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்
தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு வெற்றி கிடைத்துள்ளது,
பனை விதைகளை திறந்தவெளியில் தூவி செல்வது வழக்கம் அப்படி தூவி செல்வதின் மூலம் 5% கூட பனை மரங்கள் வளர வில்லை,ஆனால் தற்போது புதிய முயற்சியால் பனை விதைகளை கொண்டு பனை நாற்றங்கால் தமிழகத்தில் முதல்முறையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது,
 இவற்றை அப்படியே எடுத்துச் சென்று நடவு செய்வதன் மூலம் முழுமையாக நமக்கு பயன்தரும், 
ஒரு பனை நாற்றங100 ரூபாய் என்கிற விதத்தில் 50 லட்ச ரூபாய் செலவில் 55 ஆயிரம் பனைமர நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நாற்றங்கால் அனைத்தும் அடுத்த இரண்டு மாதங்களில் தொழில் பேட்டைகள் தொழில் பூங்காவில் நடவு செய்யப்பட உள்ளது, அரசின் அறிவுரையின்படி தொடர்ந்து பனை மரங்களை உற்பத்தி செய்து அழிவை நோக்கி செல்லும் பனைமரங்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
பேட்டி.மகேந்திரன்
மாவட்ட வன அலுவலர்

No comments:

Post a Comment

Post Top Ad