பழமைவாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 April 2022

பழமைவாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா

ஓசூரில் பழமை வாய்ந்த ஸ்ரீகோதண்டராமர் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

ஓசூர் ராம்நகரில் ஸ்ரீகோதண்டராமர் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயில் சிதிலடைந்து காணப்பட்டது. இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் ராம்நகர் பொதுமக்கள் கோயில் கமிட்டி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து கோயிலை புரணமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

கோயில் புரணமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கி உள்ளது. முதல் நாளான இன்று, விஸ்வக்ஸேன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இன்று 18ஆம் தேதி திங்கட்கிழமை துவங்கிய இந்த கும்பாபிஷேக விழா நாளை செவ்வாய்க்கிழமை நாளை மறுநாள் புதன்கிழமை என தொடர்ந்து நடைபெற்று வரும் வியாழக்கிழமை 21ஆம் தேதி கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad