போதை பொருட்களால் ஏற்றப்படும் தீமை குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 April 2022

போதை பொருட்களால் ஏற்றப்படும் தீமை குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கினார். இந்த ஊர்வலம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வரை சென்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
புகார் தெரிவிக்கலாம்
சாரயம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் கண்பார்வை இழத்தல், பசியின்றி உடல் நலம் குறையும், நிரந்தர உடல் நலம் குறையும், நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்தும், நினைவாற்றல் பாதிக்கப்படும், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழக்க செய்யும், குடும்ப பாசம் விடுபட்டு, சமூகத்தில் மதிப்பு குறையும். உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட தீமைகளிலிருந்து விடுபட போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று சூளுரைத்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
அதேபோல போதை பொருட்களை கடத்துவதோ, வைத்திருப்பதோ, விற்பதோ, உண்டாக்குவதோ, உபயோகிப்பதோ, சட்டப்படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாராயம் மற்றும் போதை பொருட்கள் பற்றிய புகார்களை 10581 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உதவி ஆணையர் (ஆயம்) பாலகுரு, கோட்ட ஆய அலுவலர்கள் கண்ணியப்பன் (கிருஷ்ணகிரி), மகேந்திரன் (ஓசூர்), தாசில்தார் சரவணன், தலைமை உதவியாளர் சக்தி, தனி வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad