ராயக்கோட்டை அருகே சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. 25 டன் சிமெண்ட் மூட்டைகள் எரிந்து நாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உள்ளுகுருக்கை கிராமத்தில் இன்று இரவு சுமார் 25 டன் கொண்ட சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
தர்மபுரி மாவட்டத்திலிருந்து ராம்கோ சிமெண்ட் மூட்டைகளை கனரக வாகன லாரியில் சுமார் 25 டன் கொண்ட 600 மூட்டைகளுடன் கர்நாடக மாநிலம் தாவணிகரை நோக்கி முருகன் டிரைவர் கனரக லாரியை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ராயக்கோட்டை அருகே உள்ளுகுருக்கை கிராமத்தின் அருகே வந்து கொண்டிருக்கும்போது லாரியின் முன்பக்க டயர் வெடித்து சிதறியது. உடனே பெட்ரோல் டேங்க் தீ பிடித்து மளமளவென பரவியது. தயிர் வெடித்ததும் தீப்பற்றி இதைக்கண்ட டிரைவர் முருகன் அதீர்ச்சியடைந்து உடனடியாக லாரியை விட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து நடுரோட்டில் லாரியில் தீ மளமளவென பரவி அப்பகுதியில் பெரும் தீ கொளுத்து விட்டு லாரி மூழுவதுக் பரவியது. இதையடுத்து அப்பகுதி வாகன ஓட்டிகள் உடனடியாக தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி லாரியில் இருந்த தீயை அணைத்தனர். லாரி முழுவதும் தீ பற்றி எரிந்து 25 டன் சிமெண்ட் மூட்டைகள் எரிந்து நாசமாகி லாரி எலும்பு கூடாக காட்சியளித்தது. இந்த லாரி விபத்தால் இராயகோட்டை தேன்கனிகோட்டை, கெமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்ன தகவல் இருந்து வந்த ராயக்கோட்டை போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 25 டன் கொண்ட சிமெண்ட் மூட்டைகள் தீப்பற்றி எரிந்து நாசமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment