ஒசூரில் தண்ணீர் பந்தல் மற்றும் மாமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை மாநகர மேயர் S.A.சத்யா திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி 9வது வார்டு, பாரதியார் நகரில் தண்ணீர் பந்தலை ஒசூர் மாநகர மேயர் S.Aசத்யா அவர்கள் திறந்து வைத்து சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கு இளனி,தர்பூசணி,மோர், பழச்சாறு உள்ளிட்டவைகளை வழங்கினார்..பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தாகம் தணிந்து சென்றனர்..
அதனை தொடர்ந்து 9வது வார்டு மாமன்ற உறுப்பினரின் அலுவலகத்தையும் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணப்பா, சீனிவாசுலு, சென்னீரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கஜேந்திரமூர்த்தி, தியாகராஜன், கேடிஆர் திம்மராயப்பா,மகேஷ், கிருஷ்ணப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்
No comments:
Post a Comment