மாற்று திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலமாக 0 வயது முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டர்.
புதிதாக கண்டறியப்பட்ட மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு அடையாள அட்டையும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலமாக 2 நபருக்கு சக்கர நாற்காலியும், 2 நபருக்கு வாக்கரும் வழங்கினார்கள்.
சூளகிரி ஒன்றிய, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த முகாமில் கண், காது, கால், மன வளர்ச்சி, முடக்குவாதம் மற்றும் இதர குறைபாடுள்ள 400 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்து உடனடியாக அடையாள அட்டை பெற பரிந்துரை செய்தனர். இம்முகாமில் 67 குழந்தைகளுக்கு புதிய அடையாள அட்டையும், 141 குழந்தைகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID), 40 குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த முகாமினை சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் வழி நடத்தினர். வட்டார ஒருங்கிணைப்பாளர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி ஏற்பாடு செய்தார்.
No comments:
Post a Comment