தொலைதூர வாகன ஓட்டுனர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 April 2022

தொலைதூர வாகன ஓட்டுனர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு

தொலைதூர லாரி ஓட்டுனர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு 


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஓட்டுநர்களுக்கு உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சூளகிரி கிளையின் அமைந்துள்ள குஷி கிளினிக் சார்பில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகங்களிலும், வாகன ஓட்டுனர்களுக்கும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாமில் குஷி கிளினிக் மருத்துவர் புஷ்பா , திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி , ஆலோசகர் சத்தியமூர்த்தி , செவிலியர் வனிதா ,களப்பணியாளர் சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களும் , வாகன ஓட்டிகளுக்கும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad