தனியார் பள்ளி மாணவர்கள் சுகாதார தினத்தை முன்னிட்டு பேரணி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 April 2022

தனியார் பள்ளி மாணவர்கள் சுகாதார தினத்தை முன்னிட்டு பேரணி

சூளகிரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி



கிருஷ்ணகிரி ஏப்ரல்:07

உலக மக்களின் சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பானது 1948ல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு அனைத்துலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணியை செய்யும் அதிகாரம் படைத்தது.
1950ம் ஆண்டு முதல் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்க உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார தினத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தபடுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.

விழிப்புணர்வு பேரணியை சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா மற்றும் சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.


பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கப்பட்ட பேரணியில் மாணவ மாணவிகள் கொரோனா காலகட்டத்தில் களப்பணியாற்றிய மருத்துவர்கள் , காவலர்கள்,தூய்மைபணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேரணியில் கோஷம் எழுப்பப்பட்டது.

இந்த பேரணி நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மணிமாறன் , ஆலோசகர் கமலேசன் மாஸ்டர் பவித்ராமன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad