ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 15 April 2022

ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது



வேப்பனப்பள்ளி அருகே அமைந்துள்ள ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தளவாப்பள்ளி, பண்டப்பள்ளி, ப.கொத்துார் ஆகிய மூன்று கிராமங்களின் நடுவே அமைந்துள்ள 
ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் மஹா கும்பாபிேஷக விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.  
கும்பாபிஷேக விழாவினையொடி கடந்த 12 தேதி முதல் கோவில் கணபதிஹேமத்துடன், கோ பூஜை, வாஸ்து ஹோமம் ஆகியவை நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து இன்று காலை முதல் பூர்ணாஹுதி ஆராதனை, கலச ஆராதனை, கலச புறப்பாடு நடைப்பெற்றுது,

பின்னர் கோபுர விமான கலசங்களுக்கு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரினை வேத மந்திரங்கள் முளங்க
வேத விற்பணர்கள் ஊற்றி விமான கலசங்களுக்கு மஹர கும்பாபிஷேகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அஷ்டமங்கள தர்சனம், மஹா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் தெளிக்கப்பட்டது.
இந்த மஹா குப்பாபிஷேக விழாவில் தளவாய் பள்ளி, பண்டப்பள்ளி , கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் , மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்களும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமியை கோவிந்தா, கோவிந்தா என கரகோசத்துடன் வழிப்பட்டனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை
தளவாய் பள்ளி, பண்டப்பள்ளி, ப.கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏரளமான கிராம மக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானும் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad