கூட்டு உழவர் பண்ணையை வேளாண்த்துறை அலுவலர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் விளைவிக்க கூடிய தக்காளி, புதினா என்பது பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது
பல ஹெக்டேர்களில் இதனை விவசாயிகள் பயிரிட்டு வரும்நிலையில், உற்ப்பதி அதிகமானபோது விலை வீழ்ச்சியடைந்து விற்க முடியாத சூழலில் விவசாயிகளை காப்பாற்றும் நோக்கில்
சூளகிரியில், சூளகிரி புதினா - தக்காளி கூட்டு பன்னை உழவர் உற்ப்பதியாளர் கம்பெனி லிமிடட் அலுவலகத்தை கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்த்துறை அலுவலர் ரமணகீதா திறந்து வைத்தார்
இதன் மூலம் விவசாயிகளிடம் பெறப்படும் காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் ஆன்லைன் வர்த்தகத்திற்கும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்
இந்த நிகழ்ச்சியினை தலைவர் ராமசந்திரன், செயலாளர் நஞ்சுண்டன் மற்றும் இணை இயக்குனர்கள், தோட்டக்கலை, வேளாண்துறை, தலைமை விஞ்ஞானி மற்றும் விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்
No comments:
Post a Comment