அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு அறக்கட்டளை சார்பில் உதவிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காருபாலா கிராமத்தில் அமைந்துள்ள தாருல் உலூம் ஹாஷ்மியா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொண்டு அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டுகளாக மருத்துவ முகாம் , ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் , பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், இரத்த தான முகாம் உள்ளிட்ட தொடர்ந்து சமூக பணி மற்றும் சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டு அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பட்டாகுருப்பரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் , பேனாக்கள் , புத்தக பைகள் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் இதாயத் ஷேக் , தலைவர் கஃவுஸ் , தன்பீர் , அஷ்மத் , நவீத், சல்மான் , வசீம் , பாபு ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment