பெண்ணை உல்லாசத்திற்க்கு அழைத்தவர் அடித்து கொலை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 April 2022

பெண்ணை உல்லாசத்திற்க்கு அழைத்தவர் அடித்து கொலை


தம்பியின் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்ததை கண்டித்த உறவினரை அடித்துக் கொலை. வேப்பனப்பள்ளி அருகே பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நரணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி 45. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த பத்து வருடங்களாக மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் இவரது தம்பி செல்வராஜ் வீட்டில் இவர் கடந்த 10 வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் அவரது தம்பியின் மனைவி சுஜாதா 37 என்பவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இந்த நிலையில் தனது கணவரிடம் சொல்ல தயக்கம் பட்ட சுஜாதா தான் தங்கை விஜியா அவருடைய கணவரான திம்மராஜ் 45 அவரிடம் இது குறித்து கூறியுள்ளார். அக்கா திம்மராஜ் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. தனது மனைவியின் தங்கை இது பற்றி கூறியதை அடுத்து நரணிகுப்பம் இருந்து வந்து திம்மராஜ் நரணிகுப்பத்தில் கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியை சந்தித்து சுஜாதவுடம் நடப்பதை எச்சரித்தும் கண்டித்தும் சென்றுள்ளார்.

 இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் நரசிம்மமூர்த்தி திம்மராஜ் கண்டித்தை ஆந்திரமடைந்து அவர் மீது கடும் கோபத்தில் உள்ளார். சரியான நேரம் பார்த்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மமூர்த்தி நேற்று முன்தினம் திம்மராஜ் நரணிகுப்பம் கிராமத்திற்க்கு வீட்டு விசேஷத்திற்கு வந்துள்ளார். இதையறிந்த நரசிம்மமூர்த்தி வரும்போது நரணிகுப்பம் கிராமத்தின் அருகே சென்று அவரை வழிமறித்துள்ளார். இருவரும் நடுரோட்டில் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வாக்குவாதம் அதிகமாக ஆத்திரம் அடைந்த நரசிம்மமூர்த்தி அருகே வைத்திருந்த மரக்கட்டையை எடுத்து திம்மராஜ் தலையில் பலமாக தாக்கியுள்ளர். தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். 

இதையடுத்து சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்த திம்மராஜ் அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திம்மராஜின் மனைவி விஜயா குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் தனது கணவரை தாக்கிய நரசிம்மமூர்த்தி மீது புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் தீவிரமாக தேடி நரசிம்மமூர்த்தியை கைது செய்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு செல்லப்பட்ட்டார் திம்மராஜ். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி திம்மராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நரசிம்ம மூர்த்தியின் மீது கொலை வழக்கு பதிவு செய்த குருபரப்பள்ளி போலீசார் அவரை விசாரணை நடத்தி வருகின்றனர். 

தம்பியின் மனைவியின் தகாத உறவை வைத்துக் கொள்ள அழைத்த நரசிம்ம மூர்த்தியை அக்கா கணவர் நியாயம் கேட்க வந்த திம்மராஜை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad