தொடர்மழை விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 April 2022

தொடர்மழை விவசாயிகள் மகிழ்ச்சி

வேப்பனப்பள்ளியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை.பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வயல்களிலும் குளம் குட்டை ஏரிகளில் நீர் நிரம்பியது. சில நாட்களாக வெப்பம் வாட்டி வைத்து வந்த நிலையில் இன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இந்த இப்பகுதியில் குளிந்த சீதோஷன நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 2 மாதங்களாக தண்ணீரின்றி காய்ந்து கிடந்த ஏரிகள் குளங்கள் தற்போது இந்த மழையால் வேகமாக நிரம்பி இருப்பதால் இப்பகுதியில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad