தொடர்மழையால் நதியில் மீண்டும் நீரோட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 17 April 2022

தொடர்மழையால் நதியில் மீண்டும் நீரோட்டம்

தொடர் மழை காரணமாக மீண்டும் மார்க்கண்டேயன் நதியில் நீரோட்டம். விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி*

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு முக்கிய நீர் பாசன ஆதராமாக மார்கண்டேயன் நதி இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வரத்து தொடங்கியது. இந்த நிலையில் மூன்றே மாதங்களாக ஆற்றில் நீர்வரத்து நின்று ஆற்றில் நீர் வற்றி பாறைகளாக வரண்டு காட்சியளித்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் நீர்பாசனமாக நினைத்திருந்த விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்தது. 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வேப்பனப்பபள்ளி அருகே உள்ள கர்நாடக மாநில எல்லைப்பகுதிகளில் வனப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மீண்டும் மார்கண்டேயன் நதியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. நீரின்றி காய்ந்து பாறைகளாக காணப்பட்ட ஆற்றில் தற்போது நீர் மீண்டும் பெருக்கெடுத்தது கடல் போல் காட்சியளித்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக எல்லையில் உள்ள சிகரலப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதி குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து தற்போது கரையை கடந்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் இல்லாமல் வரண்டு காட்சியளித்த ஆற்றில் தற்போது நீர் நிரம்பி வருவதா பொதுமக்கள் வந்து மகிழ்ச்சியாக உள்ளனர். மீண்டும் ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் மே மாதங்களில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தட்டுபாடு இருக்காது எனவும், நீலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர். நாளுக்கு நாள் வெயிலின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆற்றில் நீர் நிரம்பி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் வந்து ஆனந்த குளியளிட்டு விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad