மின்சார கம்பியை மிதித்து விவசாய பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 April 2022

மின்சார கம்பியை மிதித்து விவசாய பலி

போச்சம்பள்ளி அருகே தென்னை மட்டை விழுந்ததில் மின் வயர் அறுந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி அருகே உள்ள விருப்பம் பட்டி கிராமத்தில் முனுசாமி என்பவரது மகன் பழனி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாகரசம்பட்டி அடுத்த கமக்காலக்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியதம்பி என்பவரது மகன் மாதன் 65 என்பவர் தேங்காய் எடுக்க குத்தகை பேசி தேங்காய் வெட்டி வந்துள்ளார் இந்நிலையில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தேங்காய் விழுந்திருக்கும் என்று விருப்பம் பட்டியில் உள்ள தென்னந் தோட்டத்திற்கு வந்துள்ளார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக தென்னை மரத்திலிருந்து தென்னை மட்டை விழுந்து மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது, இதை கவனிக்காமல் மாதன் நடந்து சென்றபோது மின் வயரை மிதித்து அங்கேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார், இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடலை மீட்டு போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்_

No comments:

Post a Comment

Post Top Ad