கடும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் & வாகன ஓட்டிகள் அவதி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 April 2022

கடும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் & வாகன ஓட்டிகள் அவதி

வேப்பனப்பள்ளி நகரத்தில்

 அதிகரிக்கும் கடும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் கடும் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியானது தமிழகத்தின் ஆந்திரா கர்நாடகா மற்றும் மாநிலங்களுக்கும் எளிதாக செல்லக்கூடிய முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் இருந்து தினம் தினம் ஓசூர், பேரிகை, பாகலூர் மற்றும் கர்நாடக மாநிலம் கேஜிஎப், கோலார், மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம், குடிப்பள்ளி, சித்தூர் திருப்பதி போன்ற தொழில் நகரங்களுக்கும் தினம் தினம் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், பேருந்துகளும், கார்களும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. 

இதனால் வேப்பனப்பள்ளி நகரத்தில் மையத்தில் எப்போதும் பரபரப்பாக வாகனங்களும் பொதுமக்களும் நிறைந்து காணப்படும் வழக்கம். இந்த நிலையில் கடந்த 1 வருடங்களக வேப்பனபள்ளி நகரத்தின் மையத்தில் காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை இருபுறமும் சாலையோர கடைகள் ஆக்கிரமித்து இருப்பதாலும் இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையிலியே நிறுத்தப்படுகிறது. இதனால் மற்ற வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து செல்லக்கூடிய நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து அதிகமாக உள்ள நேரத்தில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பலர் படுகாயமடைந்த வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

பல முறை அதிகரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமால் இருப்பதால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அச்சத்தில் சாலையில் சென்று வருகின்றனர். இந்த சாலையோர கடைகளை அகற்றி வேப்பனப்பள்ளி மையத்தில் வேகத்தடைகள் அமைக்க பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் கனவை நிறைவேற்றபடுமா என்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad