தீடிரென கிழே விழுந்து சிறுமி சாவு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 April 2022

தீடிரென கிழே விழுந்து சிறுமி சாவு


வேப்பனப்பள்ளி அருகே பரிதாபம். விளையாடிக்கொண்டிருந்த போது கீழே விழுந்து 5 வயது சிறுமி சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி எல்லம்மாள் தம்பதியின் ஐந்து வயது மகள் கீர்த்தி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் முன்பு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் கீர்த்திக்கு கால் மற்றும் தலைபகுதியில்  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெற்றோர்கள் உடனடியாக கீர்த்தியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கீர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாரத விதமான கீழே விழுந்த சிறுமி பரிதபமாக உயிரிழந்த சம்பவம் இக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad