அனுமதியின்றி வைத்திருக்கும் கள்ளதுப்பாகிகள் பறிமுதல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 April 2022

அனுமதியின்றி வைத்திருக்கும் கள்ளதுப்பாகிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி வைத்திருந்த கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல், வரும்
10 ம் தேதிக்குள் துப்பாக்கிகள் ஒப்படைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயுத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்தார்.

தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார் அதன்படி மாவட்டம் முழுவதும் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
சரோஜ் குமார் தாக்கூர்
மாவட்டத்தில் நடத்தப்பட்ட
சோதனையில் தமிழகத்திற்கு அனுமதியீன்றி கடத்திவரப்பட்ட 12,000 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா மற்றும் 49 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். கடத்தலுக்கு பயன்படுத்திய 21 வாகனங்கள் மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். என குறிப்பிட்டார்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிகளவில் வனப்பகுதிகள் இருப்பதால் விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க ஏராளமான விவசாயிகள் அனுமதியின்றி கள்ள துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது அதனடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் 2 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இடையே போலீசார் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அனுமதியின்றி கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பேரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 27 கள்ள துப்பாக்கிகளை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வருகின்ற 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயுத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad