சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 April 2022

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட 
கொரோனா தடுப்பூசி போட்டுக்
கொள்ளாதவர்களுக்கான சிறப்பு கொரானா தடுப்பூசி முகாமினை நகர்மன்றத் தலைவர் திருமதி பரிதா நவாப் துவக்கிவைத்தார், இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்
கொண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டனர்.

நாடு முழுவது மீண்டும் கொரோனா பெரும் தொற்று பரவி வருவதை அடுத்து கொரோனா பெரும் தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது,
இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ளாமல் 
சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரப் பானு ரெட்டி தெரிவித்து இருந்தார்.

இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மட்டுமின்றி பேருராட்சிக்கு உட்பட்ட 1500 இடங்களில் 
இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளதவர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட கொரோனா தப்பூசி சிறப்பு மருத்துவ முகாம்களை நகர்மன்றத்தலைவர் திருமதி பரிதா நவாப் கலந்துக்கொண்டு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கிவைத்தார்
இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில்
இரண்டாம் தவணை
தடுப்பூசிகளை
ஆர்வத்துடன் வந்து
செலுத்திக் கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் அதேபோல் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கலந்துக்
கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்
கொள்ளாதவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை போட்டுக்
கொண்டனர்.
அப்போது நகராட்சி ஆணையாளர் முருகேசன், துப்புரவு அலுவலர் மோகனசுந்தரம்,நகர்மன்றத் துணைத் தலைவர் திருமதிசாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆசிப்,
திருமதி மீனா நடராஜன், திருமதி ஜோதிலட்சுமி, திருமதி 
ஆயிஷா முகமத்ஜான் உள்ளிட்ட பலர்
 கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad