புதினா விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 18 April 2022

புதினா விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

சூளகிரி பகுதியில் புதினா விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கண்ணீருடன் பெரும் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து வருவது விவசாயம் மட்டுமே. இந்த பகுதியில்2500 ஏக்கருக்கும் அதிகமாக நிலபரப்பில் விவசாயிகள் ஆண்டுதோறும் கொத்தமல்லி, புதினா, முள்ளங்கி, முட்டைகோஸ், தக்காளி, காலிபிளவர், போன்ற மாத சாகுபடி பயிர்களையும் காய்கறிகளையும் விளைச்சல் செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் விளைச்சல் செய்யப்படும் இந்த காய்கறிகள் டன் கணக்கில் தினமும் சென்னை, பெங்களூரு, மதுரை திருச்சி,சேலம், கே ஜி எஃப், மாலூர் என தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா ஆந்திர மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக புதினா நன்றாக விளைச்சல்  இருந்ததால் விலையும் விவசாயிகளுக்கு ஏற்றவாறு லாபத்துடன் வியாபாரம் செய்து வந்தனர். 100 கட்டு சேர்ந்த ஒரு பை ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்கப்பட்டது. அதாவது ஒரு கட்டு புதினா ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது. 

ஆனால் தற்போது  கடந்த சில நாட்களாக புதினாவின் விளைச்சல் அதிகரித்த காரணமாக இப்பகுதியில் புதினா விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட ஒரு கட்டு புதினா தற்போது 1 ரூபாய் முதல் 2  ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் விற்கமுடியாமல் ஏற்றுமதி செய்ய முடியாமலும் டன் கணக்கில் புதினா கட்டுகளை நஷ்டத்திற்கு விறக்க முடியாமல் வருவதாகவும்  விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். 

 மேலும் பல விவசாயிகள் பூதினாவை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு காய்ந்தது வரும் நிலை ஏற்பட்டுள்ளது. புதினாவின்  கடும் விலை வீழ்ச்சியால் இப்பகுதியில் பெருவாரியான வியாபாரிகளும் விவசாயிகளும் கண்ணீர் மல்க கவலையடைந்துள்ளனர். இதனால் பல விவசாய குடும்பங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad