ஸ்ரீ கோபிநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 17 April 2022

ஸ்ரீ கோபிநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா

அரசம்பட்டியில் ஸ்ரீ கோபிநாத கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி அமைத்துள்ள ஸ்ரீ கோபிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது அந்த கோவிலில் சித்திரை மாத திருவிழாவை மூன்னிட்டு 4-ங்கு நாட்கள் இந்த திருவிழா நடைபெற்றது. 

கடைசி நாளான இன்று கலச பூஜை, ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் கோபிநாதசுவாமி பாமா,ருக்மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யபட்டு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத கோபிநாதசுவாமிக்கும் பாமா,ருக்மணி திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் கோபிநாத் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் கோவிந்த கோவிந்த என்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.  

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொண்டனர். இவ்வழாவை கோவில் நிர்வாகம் ஏற்படுகளை செய்திருந்தனர். இவ்வழாவை ஏற்பாடுகளை ஏ.வி. கண்ணன். தர்மகர்த்தா, மற்றும் அன்பு கருணாநிதி தர்மகர்த்தா, பூசாரிகள் சீனிவாசன், சேகர், மணிகண்டன், உள்ளிட்ட பானைதாரர்கள் ஏற்பாடகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad