தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 21 April 2022

தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுக்கா தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் தீ த் தொண்டு நாள் விழாவினை முன்னிட்டு நிலைய அலுவலர் பழனி தலைமையில் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் தொண்டு நாள் விழா குறித்து பிரச்சாரங்களை மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் வருகை புரிந்த பொது மக்களுக்கு தீத்தடுப்பு பிரச்சார செய்யப்பட்டது.

 இதில் முக்கியமாக குழந்தைகள் நீர் உள்ள இடத்தில் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது எல்பிஜி கேஸ் சாய்வாக வைத்து பயன்படுத்தக் கூடாது என்பதைப் பற்றி அறிவுறுத்தப்பட்டது கிராமத்தில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் அவசர சேவைக்கு தீயணைப்பு துறையின் நம்பர் 101 102 எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக தீயணைப்பு துறை நேரில் வந்து பாதிப்பினை சரி செய்து விடும் என்று அறிவுறுத்தப்பட்டனர் பிரச்சார நிலா நிலை அலுவலர் பழனியின் தலைமையில் நடைபெற்றது தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி பாலமுருகன் விமல் ராஜ் குமார் பிரதாப் விவேகானந்தன் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad