தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 21 April 2022

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி  வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சூளகிரி வட்ட தலைவர் தினேஷ்   தலைமையில் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.

 பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியத் அமலாக்க வேண்டும் என்றும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகங்கள் செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3 1/2லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பு மேலும் காலம் குறிப்பிடாமல் தடை செய்ததை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் சாலைப் பணியாளர்களின்  41மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்றும்
 உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சூளகிரி வட்ட கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழக அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் கனகவள்ளி , மாவட்ட தலைவர் சரவணன் , மாநில துணைத்தலைவர் மலர்விழி, வட்டதலைவர் மகேஷ்வரி, ஒன்றிய தலைவர்,ரியாஸ் அகமத் , மாவட்ட துணைத்தலைவர் சப்தமோகன், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவியரசு ஆகியோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad