சொந்த செலவில் மருத்துவமனையை சீரமைக்கும் அரசு மருத்துவர் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 23 April 2022

சொந்த செலவில் மருத்துவமனையை சீரமைக்கும் அரசு மருத்துவர்



தனது சொந்த செலவில் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தை சீரமைக்கும் அரசு மருத்துவர். பொதுமக்கள், நோயாளிகள், கர்பணிபெண்கள் சமூக ஆர்வளர்களால் குவியும் பாராட்டுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார 50 க்கும் மேற்பட்ட கிரமாங்களில் இருந்தும் கர்நாடக் மாநிலத்தில் இருந்து தினமும் 100 கணக்கான நோயாளிகள், கர்பணி பெண்கள், வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரமப சுகாதார நிலையம் சுற்றி கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி இப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் மற்றும் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளும், கர்பணி பெண்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர். 

மேலும் மருத்துமனையை சுற்றி கடும் முட்புதிகளும், முள்வெளிகளும் வளர்ந்து இருப்பதால் மழை காலங்களில் விசமூச்சிகள், பாம்புகள், பூச்சிகள் மருத்துவமனைக்குள் புகுந்து விடுவதால் நோயாளிகலும், கர்பணி பெண்களும், மருத்துவ பணியாளர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சுற்றுசுவர் இல்லததால் அடிகடி மருத்துவமனை வளாகத்திற்க்குள் தேவையில்லாத நபர்களும் குடிமகன்களும் அட்டகாசமும் செய்து வருவது அதிகரித்து வந்தது. 

இந்த நிலையில் பல ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கவும் உள்ளே உள்ள காடு போல் முட்புதர்களை அகற்றி சுகாதாரமான வளாகத்தை மாற்றி தூய்மையாக்கவும் கிராம மக்கள், நோயளிகள், மருத்துவ பணியாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த அதிகாரியும் இதுவரை சுகாதார நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கமால் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். 

இந்தநிலையில் கடந்த மாதம் நாச்சிகுப்பம் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்த அரசு மருத்துவர் டாக்டர் லோகேஷ் மருத்துவமனையின் நிலையை கண்டு வேதனையடைந்தார். மேலும் மருத்துவமனையில் வரும் நோயாளிகள் படும் அவதிகளை கண்டும், கிராம மக்கள், மருத்துவ பணியாளர்கள் படும் இன்னல்களை கண்டு வேதனையடிதுள்ளார். 

இதையடுத்து தனது சொந்த செலவில் அரசு மருத்துவமனையை சீரமைக்கும் பணியில் இறங்கினார் மருத்துவர் லோகேஷ். இதில் மருத்துவமனை முன் புறத்தில் உள்ள கூரையை மாற்றியும், மருத்துவமனை வளாகத்தில் சிமெண்ட் வளாகமாக அமைத்தும் , நோயாளிகளுக்கு நிழல் கூடம் அமைத்தும், மருத்துவமனையை சுற்றி காடு போல் உள்ள புட்புதிர்களை டிராகடர் மற்றும் ஜேசிபி வைத்தும் அகற்றி சீரமைக்கும் பணியில் இறங்கியிள்ளார். மேலும் தனது சொந்த செலவில் பல லட்சம் மதிப்பில் மருத்துவமனை சுற்று சுற்றி சுற்று சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனை சுற்றி மரம் செடிகள் நடுதல், நோயாளிகள் அமர பூங்கா என பல்வேறு பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பொதுகுடிநீர் குழாய், மருத்துவமனை வளாக சாலை சீராமைப்பு என தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. 

ஒரு அரசு மருத்துவர் தனது சொந்த செலவில் பொதுமக்களின் மருத்துவமனைக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் பாகுபாடும் இன்றி மக்களுக்காக உழைத்து பாடுபடும் மருத்துவர் லோகேஷ் மற்றும் அவரது பணிகளையும் கண்ட அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் மற்றும் நோயாளிகள், கர்பணி பெண்களும் மருத்துவ பணியாளர்கள் டாக்டர் லோகேஷை வெகுவாக வாழ்த்தி பாராட்டுகளை குவித்து வருகின்றனர். 

 பல ஆண்டுகளாக சுகாதார வளாகம் காடு போல் காணப்பட்டுருப்பதை இந்த மருத்துவமனையில் தற்போது சீரமைப்பட்டு வருவதால் கிராம மக்கள் மற்றும் நோயாளிகள், கர்பணி பெண்கள் பெருமூச்சு விட்டு மகிழ்ச்சியாக மருத்துமனைக்கு வந்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad