வாடிக்கையாளர் சேவையில் சிறந்த மதிப்பு : வங்கி மேலாளருக்கு பாராட்டு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 April 2022

வாடிக்கையாளர் சேவையில் சிறந்த மதிப்பு : வங்கி மேலாளருக்கு பாராட்டு

வாடிக்கையாளர் சேவையில் தொடர் நன்மதிப்புகளை பெற்றுவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பிரதீபாவிற்கு குவியும் பாராட்டு


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான பண்ணந்தூர், குடிமேனஹள்ளி, தாமோதரஹள்ளி, தேவீரஹள்ளி, கள்ளிப்பட்டி, கள்ளியூர், வாடமங்கலம், மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வரவு கணக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கில் பத்து நிமிடத்தில் நகைக்கடன், வங்கி கணக்கு துவக்கம், இருசக்கர, நான்கு சக்கர வாகன கடன், எடிஎம் சேவை, மொபைல் பேங்க் வசதி, நெட் பேங்க் வசதி மற்றும் செக் புக் வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் பயன்பெற்ற பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இதில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கிவரும் வங்கி மேலாளர் பிரதீபா மற்றும் வாங்கி ஊழியர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad