புதிய தார்சாலை காணவில்லை கிராம மக்கள் அதிர்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 19 April 2022

புதிய தார்சாலை காணவில்லை கிராம மக்கள் அதிர்ச்சி



உங்க ஊருக்கு புது ரோடு போட்டாச்சு. போட்ட ரோடு காணமே சார். சாலையை தேடி அதிர்ச்சியில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மணவரனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்டது கொல்லப்பள்ளி மற்றும் காசிரிகானப்பள்ளி கிராமம். இந்த 2 கிராமங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கும் மாணவரனபள்ளியில் இருந்து 2 கிமி தொலைவிற்க்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தார் சாலை அமைத்து மூன்றே வருடங்களில் சாலை முழுவதும் பெயர்ந்து ஜல்லி கற்கள் ஆக காணப்பட்டது. 2 கிமி சாலை முழுவதும் குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்தும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல கூட கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த கரடுமுரடான சாலையால் அவரச காலத்தில் ஆம்பிலன் கூட வரமுடியதா அளவிற்க்கு சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. சாலை பழுதடைந்ததை தொடர்ந்து இரு கிராம மக்கள் கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைத்து தர பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், அரசு அதிகாரிகளிடமும் பலமுறை மனுக்களையும் கொடுத்தும் குறைகளையும்  கூறி வந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கிராமத்திற்கு சாலை அமைத்து தரபடவில்லை. 

இந்நிலையில் இந்த வருடம்  சாலை அமைக்க கிராம மக்கள் அதிகாரிகளிடம் சென்று மனு அளிக்க சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவகலகத்தில் மனு அளிக்க சென்றபோது அங்கு அதிகாரிகள் தங்களின் கிராமத்திற்கு ஏற்கனவே புது தார் சாலை போட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தங்களுக்கு தெரியாமல் இரவோடு இரவாக சாலை போட்டு விட்டார்களா என்று ஓடிவந்தது கிராமத்தில் பார்த்தபோது அதிகாரிகள் அமைத்த புதிய சாலை காணவில்லை என்று கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து அதிகாரிகள் கூறிய புதிய தார்சாலை காணாமல் போனதை தேடிய ஊர் பொதுமக்கள் ஊரின் அருகே பாதி தார்சாலை போட்டிருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேட்ட போது கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கிழ் நேர்லகிரி  கிராமத்தில் இருந்து மாணவரணபள்ளி சாலையில் காசிரிகானப்பள்ளி கிராம சாலை பெயர் பலகை வைத்து சுமார் 1.3 கிலோ மீட்டர் மட்டும் தொலைவில் சாலை அமைத்து விட்டதாக அரசு அறிவிப்பு பலகை வைத்து இருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேர்லகிரி கிராமத்திலிருந்து மணவரானபள்ளி வழியாக கொல்லப்பள்ளி மற்றும் காசிரிகானபள்ளிக்கு சுமார் ஐந்து கிலோமீட்டர் வருகிறது. இந்த நிலையில் நேர்லகிரி கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் 300 மீட்டருக்கு சாலை அமைத்து விட்டு சுமார் 44 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் முறைகேடு செய்து சாலையை மாற்றி இருப்பது இப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையடுத்து அதிகாரிகளிடம் கேட்டபோது தங்களுடைய கிராமத்திற்கு 2019ஆண்டு புரதம் மந்திர கிராம சாலை திட்டத்தின் கீழ் புதிய தார்சாலை அமைக்கப்பட்டதாகவும் மேலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தார்சாலை அமைக்க முடியாது, எனவும் அதிகாரிகள் கூறியதை அடுத்து மக்கள் பெரும் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் உள்ளனர். கிராம மக்கள் சென்று அதிகாரிகளை கேட்டவுடன் கிராமத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பழைய அறிவிப்பு பலகையை புதுபித்து தார்சாலை அமைத்தது போல் புதிய பலகை வைத்துள்ளனர் அதிகாரிகள். 


அவசர காலத்திற்கு கூட செல்ல முடியாமல் கடந்த 15 ஆண்டுகளாக சாலை அமைக்கபடமால்  பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அன்றாட பொதுமக்கள் கர்ப்பிணிப் பெண்கள் நோயாளிகள் வரை இந்த சாலையில் செல்லமுடியாமல் ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையில் சென்று வாழ்ந்து வரும் நிலையில் இந்த தார் சாலை அமைக்க ஆண்டுதோறும் பல ஆண்டுகளாக மக்கள் அலைந்து திரிந்து வரும் நிலையில் கிராம மக்களை ஏமாற்றும் வகையில் ஏதே ஒரு சாலையில் கிராமத்திற்கு கூட வரமால் சுமார் 4 கிமி சாலையை ஒன்றரை கிலோ மீட்டர்களுக்கு அமைத்துவிட்டு ஓடியுள்ளனர் இந்த சாலை ஒப்பந்தாரர்கள். கிராமத்திற்கு சாலை அமைக்கலாம் என வந்து அதை கிராம மக்களுக்கு தெரியாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு தப்பிய அதிகாரிகளை ஒன்றும் செய்ய முடியாமல் கிராம மக்கள் தவித்து குமுறி வருகின்றனர். 

மாவட்டத்தின் ஓரத்தின்  உள்ளதால் எங்களின் குரலும் குமுறல் அதிகாரிகளின் செவிகளுக்கு கேட்பதில்லை எனவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறனர். 

மேலும் முறைகேடான தார்சாலை மாற்றி அமைத்து பல லட்சம் முறைகேடு செய்துள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து தங்களுடையா கிராமத்திற்கு புதிய தார் சாலை அமைத்துக் கொடுக்கபடுமா என்பது இந்த இரு கிராம மக்களின் பல ஆண்டு பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad