மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 8 April 2022

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக பயிர் சேதம், ஏரி ஆக்கிரமிப்பு அகற்றுவது, வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், பட்டா வழங்குதல், கூட்டுறவு வங்கி கடன் பெறுதல், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மருத்துவ வசதிகள், மின்சார இணைப்பு வழங்குவது, நகைக்கடன் தள்ளுபடி, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்து செல்வது, மாங்காய் விலை நிர்ணயம், கொப்பரை தேங்காய் கொள்முதல், உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் ஏற்கனவே 216 மனுக்கள் அளித்ததன் பேரில் இன்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர். இவற்றில் 199 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அதற்கான விளக்கம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பபட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும்பொழுது:
இன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது அலுவலர்கள் உரிய பதில் அளித்துள்ளனர்.

 இன்று விவசாயிகளிடமிருந்து 256 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நிேைவற்ற முடியாத மனுக்களுக்கு உரிய காரணங்களுடன் மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வண்டல் எடுக்க கோரிக்கை வந்தால் அந்த மனுவின் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் 1500 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதல் 3 ன்றில் ஒரு பங்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்களில் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின் படி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad