ரம்ஜான் நோன்பு கூடாது என கண்டித்த ஆசிரியர்கள் மாணவர்கள் தர்ணா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 8 April 2022

ரம்ஜான் நோன்பு கூடாது என கண்டித்த ஆசிரியர்கள் மாணவர்கள் தர்ணா

வேப்பனப்பள்ளி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் ரம்ஜான் நோன்பு இருக்க கூடாது என மாணவர்களை கண்டித்ததால் பெற்றோர்களும் பள்ளி மாணவ மாணவிகளின் பள்ளி முன்பு தர்ணா போராட்டம். 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு.


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொரல்நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 350 மாணவர்கள் மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு விரதம் நேற்று தொடங்கியது . இந்த நோன்பு இருந்ததால் பள்ளிக்கு வரும் முஸ்லிம் மாணவ மாணவிகள் யாரும் உணவு உட்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மதிய உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் என்பவர் மாணவர்களை உணவு உட்கொள்ளுவும் தண்ணீர் அறிந்தவும் வலியுறுத்தியுள்ளார். 


நோன்பு இருப்பதால் இதனை உட்கொள்ள முடியாது என்று கூறி பள்ளி மாணவ மாணவிகள் இருந்ததால் தலைமையாசிரியர் கலாவதி, ஆசிரியர் ஆங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் இருவரும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலையில் சென்று தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்த பள்ளி மாணவ மாணவிகள் இன்று காலை கொரல்நாத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு 200க்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொற்றோகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 


இதையடுத்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் திடீரென 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பொன்மொடி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரனை கணித ஆசிரியர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் இருவதும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் போராட்டதை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றதை யடுத்து மீண்டும் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புக்கு சென்று பாடங்களை கவனித்து வருகின்றனர்,  இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

Post Top Ad