கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி அருகே தனியார் நில விற்பனை நிறுவனத்தின் மீது அபாண்ட பழி சுமத்திநிறுவனத்தின் பெயரைகெடுக்க முயற்சி செய்யும் நபர்களை நம்ப வேண்டாம் என தனியார் நிறுவனத்தினர் வேண்டுகோள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே ஜெகதேவி பாளையம் பகுதியில் தனியார் நிறுவனமான
ஜே எஸ் எஸ்.
நிறுவனம் 4.5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதை சீர் செய்து அதிலிருந்து இரண்டு இரண்டரை ஏக்கர் நிலம் சப் டிவிஷன் செய்து மனை விற்பனைக்கு அங்கீகாரத்தையும் பெற்று உள்ளனர் இந்த நிலையில்
அந்த நிலத்தை சமன் செய்யும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அந்த நிறுவனம்புறம்போக்கு இடத்தை பிடித்து அங்குகல் கோரையை ஜேசிபி எந்திரம் வைத்து உடைத்து வருவதாக முற்றிலும் தவறான தகவலை சில விஷமிகள் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜே எஸ் எஸ் நிறுவனத்தின் மேலாளர் சேட்டு.என்பவர் தெரிவிக்கையில்
நிலத்தை விலைக்கு வாங்கி முறையான டிடிசிபி அப்ரூவல் பெற்று இரண்டு ஏக்கர் நிலத்தை விற்பனைக்காக சமன் செய்து கொண்டிருந்தபோது நாங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை பிடித்து அதை ஆக்கிரமிப்பு செய்ததாக விசமிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் எனவே இது போன்ற தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும்.ஒரு அடி நிலத்தை கூட முறைகேடாக தாங்கள் பெறவில்லை எனவும் இது சம்பந்தமாக நில அளவைத்துறை வருவாய்த்துறை அதிகாரிகளும் இடத்தை பார்த்து அனுமதி பெற்ற பிறகுதான் தாங்கள் பணி செய்து கொண்டிருப்பதாகவும்
எனவே நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் நபர்களின் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.இது போன்ற செய்திகளை மர்ம நபர்கள் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment