தனியார் கல்குவாரி ஊழியர்கள் அராஜகம் பொதுமக்கள் புகார் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 April 2022

தனியார் கல்குவாரி ஊழியர்கள் அராஜகம் பொதுமக்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுக்கா அத்திமுகம் அருகே வெங்கடேஷ்புரம் பஞ்சாயத்தில் உள்ள "IBM மினரல்ஸ்" ஜல்லி உடைக்கும் தொழிற்சாலை கழிவுகளை வசிப்பிடங்களில் கொட்டுகின்றனர். 23-04-2022 அன்று குட்டையில் தண்ணீர் குடிக்க சென்ற பசு மாடு குழிக்குள் மாட்டிகொண்டது. 

கிரஷர்க்கு சொந்தமான டிப்பர் லாரி கழிவுகளை குழியில் மாட்டிகொண்ட பசு மாட்டின் மேல் கொட்டியுள்ளனர், அருகே இருந்த கிராமவாசிகள் சென்று கேட்டதற்கு மிரட்டி அடித்துள்ளனர், பின்னர் கிராமவாசிகள் கிரேன் மூலம் மாட்டை மீட்டு சிகிச்சை அளித்தும் மாடு ஆபத்தான நிலையில் உள்ளது. 
இந்த IBM கிரஷரால் ஏற்படும் தூசு, மாசு காரணமாக கிராம மக்கள் சுவாச பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad