புதிய பேருந்து வசதி தொடங்கியது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 5 April 2022

புதிய பேருந்து வசதி தொடங்கியது

போச்சம்பள்ளியில் இன்று பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பேருந்து வசதியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார் 


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பேருந்து வழித்தடத்தை நீட்டித்து மற்றும் மாற்றி தர கோரிக்கை மனுவின் மீது பரிசீலனை செய்து இன்று போச்சம்பள்ளியில் இருந்து ஊத்தங்கரை வரை ஒரு பேருந்து இயக்கப்பட்டது மற்றொரு பேருந்து தர்மபுரியில் இருந்து அகரம் வழியாக நாகரசம்பட்டி சென்றுகொண்டிருந்த பேருந்து தற்போது வேலம்பட்டி வரைக்கும் வழித்தடத்தை நீட்டித்து பேருந்து இயக்கப்பட்டது நிகழ்வில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம் வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad