மழை வேண்டி கிராமத்தில் சிறப்பு நாடகம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 20 April 2022

மழை வேண்டி கிராமத்தில் சிறப்பு நாடகம்

தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் அருகே ஜவனசந்திரம் கிராமத்தில் மழை வேண்டி ஊர் பொதுமக்களால், அன்னதானம், நாடகம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் அருகே ஜவனசந்திரம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தான வீர சூர கர்ணா என்ற நாடகம் நடைபெற்றது.

உலகத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் இந்த வருடம் நல்ல மழை பெய்ய வேண்டும் விளைச்சல் அதிகமாக வர வேண்டும், மக்கள் அனைவரும் மன நிம்மதியோடும், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், நாடு வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஜவனசந்திரம் கிராம பொதுமக்கள் சார்பாக தான வீர சூர கர்ணா நாடகம் நடத்தினார்கள். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் சார்பாக நாடகத்தைக் காண வந்த சுற்றுப்புற கிராமங்களான உனிசெட்டி,அய்யூர், தோட்டிகுப்பம், மேலூர், குடிசலூர், தொளுவபெட்டா, குள்ளட்டி உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு டி.இராமச்சந்திரன் அவர்கள், M.நாகராஜ் மாவட்ட குழு உறுப்பினர் சிபிஐ, ஜேபி என்கிற ஜெயபிரகாஷ் ஓசூர் மாநகராட்சி உறுப்பினர் அஇஅதிமுக, எஸ்.முனிராஜ் என்ஜிஜிஓ காலனி, பி.சுரேஷ் திமுக பொம்மண்டாபள்ளி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சித் தலைவர் டிஆர்எஸ் சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், பெட்டமுகிலாளம் பஞ்சாயத்து தலைவர் முனிராஜ், ஜவனசந்திரம் வார்டு உறுப்பினர் சிக்கையன் ராதா, நாடகக்குழு வாத்தியார் நாகபூஷணப்பா மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad