வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் முகாம் : பொதுமக்கள் பீதி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 13 May 2022

வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் முகாம் : பொதுமக்கள் பீதி.

வேப்பனப்பள்ளி அருகே மாநில எல்லை வனபகுதியில் 11 காட்டு யானைகள் முகாம். பொதுமக்கள் பீதி 20 பேர் கொண்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி மற்றும் மஹராஜகடை ஆகிய வனபகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த காட்டுயானைகள் அடிகடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலத்தில் பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் ஊருக்கும் வரும் ஒற்றை காட்டு யானை விவசாயிகளை தாக்கியும் வருகின்றது. 

இந்த நிலையில் நேற்று இரவு கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்த 11 காட்டு யானை இரண்டு குழுக்களாக பிரிந்து தமிழக எல்லை வனப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளதாக வனப்பகுதி தமிழக வனத்துறையினர் 20 பேர் கொண்ட குழு தற்போது 11 யானைகளையும் இரு குழுக்களாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் பானம், பட்டாசுகள் வைத்து யானைகளை காட்டுக்குள் விரட்டி வருகின்றனர். மேலும் வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் கொங்கனப்பள்ளி, கே கொத்தூர், சிகரமாகனப்பள்ளி, எப்ரி, ஆகிய வனபகுதி அருகில் உள்ள கிராம பொதுமக்கள் விவசாயிகள்ஆடு மாடுகள் மேய்க்கும் விவசாயிகளும், வனபகுதிக்கும் இரவு நேரத்தில் வயல்வெளிகளில் காவலில் இருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருன்றனர். மீண்டும் 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad