குழந்தை திருமணம் தடுப்பு : கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 13 May 2022

குழந்தை திருமணம் தடுப்பு : கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் 

கலெக்டர் தலைமையில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு

சமூகத்தில் பெண்கள் மேலான நிலையை அடையவும், அவர்களின் உரிமைகளை பெற்றுத்தரவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் சமூக நலன் மற்றும் மகளீர் உரிமைதுறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

இந்த பேரணி நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு , மாநில மகளீர் ஆணைய உறுப்பினர் மாலதி நாரணசாமி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளீர் உரிமைதுறை அலுவலர் விஜயலட்சுமி, துணை (சுகாதார பணிகள் )இயக்குர் கோவிந்தன் வட்டாட்சியர் சரவணன் மற்றும் பொதுமக்கள் , தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad