வேப்பனப்பள்ளி அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் மீது 150 பேர் காவல் நிலையத்தில் புகார். வீடு அலுவலகத்திற்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி. மாதேப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் கணவன் மனைவி இருவரும் ஶ்ரீ அரி எண்டிர்பிரைசஸ் என்னும் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பேரிகை பாகலூர், தர்மபுரி,ஓசூர் மற்றும் சுற்றுவட்டார ஆந்திரா மற்றும் கர்நாடகம் ஆகிய கிராம பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக பணத்தை கொடுக்காமல் இருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் கடந்த மாதம் தலைமுறையில் தலைமறைவாகினர். இந்த நிலையில் அவர்களை கைது செய்யக்கோரியும் பணத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் வேப்பனபள்ளி காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் விசாரனை நடத்தினர். பிறகு நேற்று மட்டும் இன்றும் தொடர்ந்து 150க்கு மேற்பட்ட பொதுமக்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக 5 பிரிவுகளில் வழக்கு பதிவு போலீசார் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்கு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தி மட்டும் முனிரத்தினம் ஹ பக்தியை இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment