மே தின - இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 May 2022

மே தின - இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

சூளகிரியில்

தொழிலாளர்கள் தின சிறப்பு மருத்துவ முகாம்


உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அமைந்துள்ள பேருந்து நிலையம் அருகே சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது


இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சூளகிரி கிளை சார்பில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் ஏராளமான வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை பெற்றனர்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் முகாமை துவக்கி வைத்தார்.
மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு ,மற்றும் இரத்த பரிசோதனை செய்தல், ரத்த , அழுத்தம் சரிபார்த்தல் ரத்த வகை கண்டறிதல், மருத்துவ ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைப்பெற்றது.


மருத்துவ நிகழ்ச்சியில் ஜேசிஐ மற்றும் அசோக் லைலேண்ட் - கற்றல் இணைவு அறக்கட்டளை சூளகிரி , ஆரோக்கிய ஹெல்த் சென்டர் ( சி.எஸ்.ஆர்) , உயிரூட்டல் அறக்கட்டளை , எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கிருஷ்ணகிரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அன்னை மாதம்மாள் கல்வி நிறுவனம் , உடன் இணைந்து ஒருங்கிணைந்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


மருத்துவ முகாம் நிகழ்ச்சி சூளகிரி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஏற்ப்பாடு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad