துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 May 2022

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது

சூளகிரி அருகே

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.




கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஒட்டர் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழா, இம்மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது. வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூய யாகம், திரவுபதி துகில், அர்ச்சுனன் தபசு, குறவஞ்சி, கிருஷ்ணன் துாது, அரவான் களப்பலி, கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளம் போன்ற கூத்து நாடகம் நடக்கிறது.

சிவ சுப்ரமணியன் கலைக்குழுவினரின் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சியை, கடந்த 18 நாட்களாக நடத்தினர். இறுதி நாளான நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரவுபதி அம்மன் கோயில் எதிரே, சுமார் 30 அடி நீளத்திற்கு துரியோதனன் உருவ பொம்மை மண்ணால் உருவாக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள் சொற்பொழிவாற்றினர். இறுதியில் பீமனும், அர்ச்சுனனும் போரிடும் காட்சிகள் தத்ரூபமாக நடத்தப்பட்டு இறுதியில் அர்ச்சுனன் போர் வாலால் துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. 18 நாட்கள் நடந்த மகாபாரதம் திருவிழா நிறைவு பெற்றது. இப்படி 18 நாட்கள் மகாபாரதம் நடத்துவதின் மூலம், கிராமத்தில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் நொடிகள் நீங்கும், குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், மழை பொழியும், நன்மைகள் பிறக்கும் என்கிற நம்பிக்கையுடன் கலை நிகழ்ச்சி நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad