பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைத்தீர்ப்பு முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 14 May 2022

பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைத்தீர்ப்பு முகாம்

ஒசூர் அருகே பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைத்தீர்ப்பு முகாம்: 60க்கும் மேற்ப்பட்டோர் பயன்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மாதத்தின் 2 வது சனிக்கிழமைகளில் ஊராட்சிகள் வாரியாக பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

இந்தநிலையில், இன்று ஒசூர் அடுத்த சென்னசந்திரம் ஊராட்சியில் இன்று முதல் நிகழ்ச்சியாக தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வி தலைமையில் நடைப்பெற்ற குறைத்தீர்ப்பு முகாமில்

ஊராட்சிக்குட்பட்டோர் புதியதாக குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் மாற்றம், புகைப்படம் மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கல் உள்ளிட்டவைகள் என 60க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று பயணடைந்தனர்

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் ரெட்டி, உணவு வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் தாயுப் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad