தாழ்வான பகுதியில் அமைந்த மின் கம்பம் : விவசாயம் பாதிப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 24 May 2022

தாழ்வான பகுதியில் அமைந்த மின் கம்பம் : விவசாயம் பாதிப்பு

*சூளகிரி அருகே மின்சார வாரிய துறையினர் அனுமதியின்றி போடப்பட்ட மின் கம்பத்தால் விவசாயம் செய்ய இடையூறாக இருப்பதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.*



கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வேம்பள்ளி கிராமத்தில் வசிக்கும் கோவிந்தசாமி என்பவரது விவசாய நிலத்தில் விவசாயத்திற்க்காக மின்சார வாரிய துறையினரால் மின் கம்பங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது.


மின்சார கம்பிகள் மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் விவசாயம் செய்ய இடையூறாக இருப்பதாகவும் பல முறை மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயி வேதனை தெரிவித்து வருகிறார்.


மேலும் டிராக்டர் மூலம் விவசாய 
பணியைமேற்க் கொள்ளும் போது காய்ந்த விறகிலானா ஊன்றுக்கோலை ஆபத்தை உணராமல் ஒருவர் மின்சார கம்பியை தாங்கி பிடித்தவாறு விவசாய பணியை மேற்கொண்டு வருகிறார்.


இந்த ஆபத்தான செயலில் விவசாய பணியில் ஈடுபட கூடாது எனவும் விவசாயத்திற்க்கு இடையூராக உள்ள மின் கம்பத்தை மாற்றுப்பாதையில் அமைத்திட வேண்டும் எனவும் மின்வாரிய துறை விரைவில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad