வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு: - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 29 May 2022

வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள 10 வட்டாரங்களில் RGSA திட்டத்தின் கீழ் 3009 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகின்றது. ஒரு அணிக்கு 30 நபர் வீதம் மொத்தம் 97 அணிகளாக ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுகிறது.

 மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு. வெங்கடாசலம் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் திரு. நிக்கோலா பிரகாஷ் அவர்கள் பயிற்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புத்தாக்க பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

இப்பயிற்சியில் 73 வது இந்திய அரசியலமைப்பு சட்டம், 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச்சட்டம், ஊராட்சி மன்ற தலைவரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், துணைத்தலைவரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், வார்டு உறுப்பினர் கடமைகள் மற்றும் பொறுப்புகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள், 18 துறைகள் சார்ந்து நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள் அடைவது தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

 இப்பயிற்சியை மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் மூலம் பயிற்சியளிக்கப்பட்ட மாவட்ட அளவிலான முதன்மை பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் புத்தாக்கப் பயிற்சியில் ஆர்வத்தோடு பங்கெடுத்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad