குதிரையை கொன்ற சிறுத்தை : சிசிடிவி காட்சிகள் பதிவானது: - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 4 May 2022

குதிரையை கொன்ற சிறுத்தை : சிசிடிவி காட்சிகள் பதிவானது:

தேன்கனிக்கோட்டை அருகே 

குதிரையை கொன்ற சிறுத்தை : கண்காணிப்பு கேமராவில் பதிவானது :

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே, குதிரையை வேட்டையாடி கொன்றது சிறுத்தை தான் என்பதை, கண்காணிப்பு கேமரா பதிவு வாயிலாக, வனத்துறையினர் உறுதி செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த பேலாளம் - நெல்லுமார் சாலையில், 50 ஏக்கரில் தனியார் பண்ணை உள்ளது. இங்கு வளர்க்கப்படும் குதிரைகளில், ‍பெண் குதிரை ஒன்றை, கடந்த 1ல் மர்ம விலங்கு வேட்டையாடி கொன்றது.இறந்த குதிரையின் இறைச்சியை சாப்பிட, அந்த மர்ம விலங்கு மீண்டும் வரும் என்பதால், ஜவளகிரி வனத்துறையினர் குதிரையின் சடலத்தை அகற்றாமல் அப்படியே விட்டிருந்தனர்.

மேலும், வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர், அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர்.நேற்று முன்தினம் கண்காணிப்பு கேமராக்களை பார்த்ததில், கடந்த 1 ஆம் தேதி இரவு 8:35 மணிக்கு, குதிரை இறைச்சியை சாப்பிட சிறுத்தை வந்தது பதிவாகி இருந்தது.

இதனால், குதிரையை கொன்றது சிறுத்தை தான் என, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வனத்துறையினர் உறுதி செய்தனர்.மேலும், சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad